தூய்மைதனை இதயம் தனில்
தந்த இறைவா!
துலங்கும் ஒளிதனையே எமக்கென்றும் அருள்வாய்! (தூய்மை)
துன்பம் கொண்டோர்க்கு தொண்டு ஆற்றவும்
அன்பு வழி சென்று அமைதி காணவும் (தூய்மை)
சாந்தி தீபம் ஏந்தி இவ்வையகம் சிறக்க துலங்கும் ஒளிதனையே
எமக்கென்றும் அருள்வாய் !
..எமக்கென்றும் அருள்வாய்..
எமக்கென்றும் அருள்வாய்!