https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfztkGGfVpqGUvBPJ5xdxGc_HQ2PfBb09d0Z-ZLgTLvEWjjlg/viewform?usp=sf_link
Sunday, August 30, 2020
Saturday, August 29, 2020
பத்தாம் வகுப்பு - இலக்கணம் பயிற்சித் தேர்வு
வகுப்பு 10 இலக்கணம்
இயல் - 2. பயிற்சித்தாள் 20 x 1= 20
அனைத்திற்கும் விடையளி
சான்று தருக
1 )தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?
அ) ஐந்து ஆ) ஆறு இ)ஏழு ஈ) ஒன்பது
2)வேற்றுமைத்தொகை - கண்டறிக
அ ) செங்காந்தல் ஆ)மார்கழித்திங்கள்
இ)கரும்பு தின்றான் ஈ)மலர்க்கை
3) வினைத்தொகை
அ )அன்புச்செல்வன் ஆ) வெண்டைக்காய்
இ )மோர்க்குழம்பு ஈ)தொடுதிரை
4) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
அ)வெண்டைக்காய் ஆ)அன்புச்செல்வன் இ) தொடுதிரை ஈ)மோர்க்குழம்பு
கோடிட்ட இடத்தை நிரப்புக
5))சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது.............
அ)தொடர் ஆ)சொற்றொடர் இ )சொல் ஈ) பா
6) ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்தால்............. எனப்படும்.
அ)பண்புத்தொகை ஆ)வினைத்தொகை இ)வேற்றுமைத்தொகை ஈ) உம்மைத் தொகை
7 ) சாரைப்பாம்பு என்பது ...........ஆகும்
அ)பண்புத்தொகை ஆ)உம்மைத்தொகை
இ)அன்மொழித்தொகை ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
8 ) தமிழ்த் தொண்டு என்பது ...........
அ)வேற்றுமைத்தொகை ஆ)நான்காம் வேற்றுமைத் தொகை
இ)வினைத்தொகை ஈ)நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
கூறியவாறு செய்க
9 ) தாய் சேய்
அ) உம்மைத் தொகை ஆ) உவமைத் தொகை இ)பண்புத் தொகை ஈ)வினைத் தொகை
10)அன்மொழித்தொகை - கண்டறிக
அ ) தண்ணீர்த் தொட்டி ஆ)தங்கமீன்கள் இ) சிவப்புச் சட்டை பேசினார் ஈ)அண்ணன் தம்பி
11)பண்புத்தொகை கண்டறிக
அ)மலர்க்கை ஆ)மலர்ப்பாதம் இ) வட்டத்தொட்டி ஈ)மதுரை சென்றார்
12) உவமைத்தொகையை கண்டறிக
அ )மலர்க்கை ஆ)தாய் சேய் இ) வீசு தென்றல் ஈ) மோர் பானை
இலக்கண குறிப்புத் தருக
13 )கொல்களிறு
அ)பண்புத்தொகை ஆ)உவமைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) வினைத்தொகை
14) தேர்ப்பாகன்
அ)உம்மைத்தொகை ஆ )அன்மொழித்தொகை இ)வேற்றுமைத் தொகை
ஈ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
15)மதுரை சென்றார்
அ)வேற்றுமைத்தொகை ஆ)வினைத்தொகை இ) பண்புத்தொகை ஈ) உவமைத்தொகை
16)வீசுதென்றல்
அ)வினைத்தொகை ஆ)பண்புத்தொகை இ)உம்மைத்தொகை ஈ)அன்மொழித்தொகை
சரியான சொற்றொடரைக் கண்டறிக
17) அ) வினைப் பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்
ஆ)வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே பண்புத்தொகை அமையும்
இ)வினைப்பகுதி அடுத்துப் பெயர் சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே உம்மைத்தொகை அமையும்
ஈ)வினைப்பகுதி அடுத்து பெயர் சொல்லும் அமைந்த சொற்றொடர்களில் வேற்றுமைத்தொகை அமையும்
18 அ)ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வினைத்தொகை எனப்படும்
ஆ) ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத் தொகை எனப்படும்
இ)ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது பன்புத்தொகை எனப்படும்
ஈ) ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது அன்மொழித் தொகை எனப்படும்
19) அ)வேற்றுமை, வினை, பண்பு ,உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை இல்லை
ஆ)வேற்றுமை ,வினை ,பண்பு ,உவமை ,உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும் .
இ)வேற்றுமை ,வினை, பண்பு ,உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது வினைத்தொகை ஆகும்
ஈ)வேற்றுமை ,வினை ,பண்பு ,உவமை ,உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது பண்புத்தொகை ஆகும்
20)
அ)ஆகிய ,ஆன என்பன வினை உறுப்புகளாகும்
ஆ)ஆகிய ,ஆன என்பன பண்பு உறுப்புகளாகும்
இ)ஆகிய ,ஆன என்பன உவம உருபுகள் ஆகும்
ஈ)ஆகிய, ஆன என்பன வேற்றுமை உருபுகள் ஆகும்
முற்றும்
விடைகள்
1. ஆ. 2. இ 3. ஈ. 4. அ, இ. 5. அ, ஆ
6. இ 7. ஈ. 8. ஈ 9. அ 10. இ
11. இ. 12. அ 13. ஈ. 14 ஈ 15 அ
16. அ 17. அ. 18. ஆ 19. ஆ. 20 ஆ
Saturday, April 18, 2020
பத்தாம் வகுப்பு : புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி
முன்னுரை : திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் புயலிலே ஒரு தோணி. இந்நூலின் ஆசிரியர் பெ சிங்காரம். இந்நூலில் உள்ள கடற் கூத்து என்ற அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதியே நம் பாடம். இயற்கையின் அசைவு சீற்றமாகி ஊழித்தாண்டவமாக மாறுகையில் எதிர் நிற்க முடியாமல் போராடும் போராட்டம்தான் இக்கதை . புயலின் சீற்றம் கண்முன் காட்சியாக விரிகின்றது. இக்கதையில் புயலில் சிக்கிய தோனியின் நிலை நம் உயிரை உறைய வைக்கிறது.
புயலுக்கு முன் அமைதி
கொளுத்திக் கொண்டிருந்த வெயில் கண்இமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டது .மேக பொதிகள் பறந்து கும்மிருட்டாக இறுகி நின்றன. அலைகள் எண்ணெய் பூசியது போல மொழுமொழுவென நெளிந்தன. தலைமை மாலுமி யிடம்(கப்பித்தான்) பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்த மாலுமிகள் பாய் மரத்தை நோக்கி ஓடிச்சென்று கயிறுகளை இறுக்கிறார்கள். விவரிக்க இயலாத ஒரு உறுத்தல் ஒவ்வொருவர் உணர்விலும் தென்பட்டது.
புயலின் தாண்டவம்
கிடுகிடுக்கும் இடி முழக்கத்துடன் மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன. வானம் உடைந்து வெள்ளம் கொட்டு கொட்டென்று கொட்டியது ..சூறாவளியும் மழையும் காற்றும் கூடிக் கலந்து ஆடி குதித்தன மழையுடன் காற்று இணைந்துவிட்டது எலும்புகள் முடிவது போல் நொறு நொறு நொறுங்கல் ஒலி கேட்டது ./திடீரென அமைதி பாய்ந்து வந்து மிரட்டியது. வானும் கடலும் பிரிந்து தனித்து தென்பட்டன.
மீண்டும் கோரத்தாண்டவம்
அனைவரும் தட்டுத்தடுமாறி எழுந்து நடந்தனர் வானும் கடலும் காற்றும் மழையும் மீண்டும் ஒன்றுகூடி கொக்களிக்கின்றன. வானம் பிளந்து தீ கக்கியது. மழை வெள்ளம் கொட்டுகிறது. காற்று முட்டி புரட்டியது. கடல்வெளி கூத்தாடியது .தொங்கான் நடுநடுங்கியது .தாவித்தாவி விழுந்து நொறுங்கியது .கப்பல் நொறு நொறு நொறுங்கியது. முகம், உடல்,கால் ,கைகளில் வெள்ளம். உடலை இறுக்கி இறுக்கி ரம்பமாய் அறுக்கிறது. தொங்கான் மீண்டும் சுழன்று சுழன்று கிறுகிறுத்து கூத்தாடியது.
புயலுக்குப் பின்
தொங்கானில்(கப்பலில்) நீர் நெளிகிறது .பாய்மரம் ஒடிந்து கிடக்கிறது. மாலுமிகள் நீரை இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைக்கிறார்கள். ஆப்பு அடித்தனர்; மரம் வெட்டினார்கள் ;செதுக்கினர். கடற் கூத்தின் போது மாலுமிகள் தூக்கி எறிந்த பெட்டிகளும் புகையிலை சிப்பங்களும் தொங்கானின் இருபுறமு ம்மிதந்து வந்தன. தொங்கான் தட்டுத்தடுமாறி சென்றது. கடற்கூத்து எவ்வளவு நேரம் நீடித்தது என்று கணக்கிட முடியவில்லை. கப்பல் தன்வசம் இழந்து தடுமாறி செல்கிறது . கப்பித்தான் கப்பலின் மேல் தட்டு வந்து கடலையும் வானையும் பார்த்தான் இனி பயமில்லை விரைவில் கரையை க் பார்க்கலாம் என்றான். பாண்டியன் நாற்புறமும் பார்த்து மலைத்து போய் நின்றான்.
கரை தென்பட்டது
தொங்கான் கடலின் தேவைக்கு ஏற்றார் போல மிதந்து சென்றது பகலிரவாய் பின் பகலாகி மீண்டும் இரவானது .பிறைமதி வெளிச்சம் ஒளிர்ந்தது .விண்மீன்கள் ஒளியுடன் கண்சிமிட்டி நின்றன. அவுலியா மீன்கள் நீந்தின. கடற்பரப்பின் ஐந்தாம் நாள் மாலை வானோடு வானாய் கடலோடு கடலாக பச்சை தெரிவது போல் இருந்தது .அரை மணி நேரத்திற்குப்பிறகு மீன்பிடி படகு விளக்குகள் தென்பட்டன. கப்பல் கரையை நெருங்கி போய் நின்றது. பயணிகள் சுங்க அலுவலகத்துக்கு சென்றனர். பயணச்சீட்டுகளை நீட்டினர் .ஜப்பானிய அதிகாரி தமிரோ என்று உறுமினார். தமிழர்கள்தான் என்று தலைகுனிந்து வணங்கினர். பின்னர் சீட்டில் அதிகாரிகள் முத்திரை பதித்து திருப்பிக் கொடுத்து அவர்களை அனுப்பினார்கள்.
முடிவுரை :
மிதக்கிற படகு அல்ல
மூழ்கும் படகே
கடலின் ஆழத்தை அறியும்
ஆம் கடல் பயணம் மேற்கொண்ட வர்களுக்கும் இயற்கை சீற்றத்தில் சிக்கியவர்களுக்கும் தான் அதன் கொடூர முகம் தெரியும் .இக்கதை புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலை உணர்த்துவதோடு கொந்தளிக்கும் கடலுக்குள் பயணித்த அனுபவத்தை நமக்கு தருகிறது.
Wednesday, March 18, 2020
நோயுற்று அடராமல்
நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல் பாயிற் கிடவாமல் பாவியேன் -காயத்தை ஓர்நொடிக்குள் நீக்கியெனை ஒண் போரூர் ஐயாநின் சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து . -
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
Subscribe to:
Posts (Atom)