புயலிலே ஒரு தோணி
முன்னுரை : திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் புயலிலே ஒரு தோணி. இந்நூலின் ஆசிரியர் பெ சிங்காரம். இந்நூலில் உள்ள கடற் கூத்து என்ற அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதியே நம் பாடம். இயற்கையின் அசைவு சீற்றமாகி ஊழித்தாண்டவமாக மாறுகையில் எதிர் நிற்க முடியாமல் போராடும் போராட்டம்தான் இக்கதை . புயலின் சீற்றம் கண்முன் காட்சியாக விரிகின்றது. இக்கதையில் புயலில் சிக்கிய தோனியின் நிலை நம் உயிரை உறைய வைக்கிறது.
புயலுக்கு முன் அமைதி
கொளுத்திக் கொண்டிருந்த வெயில் கண்இமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டது .மேக பொதிகள் பறந்து கும்மிருட்டாக இறுகி நின்றன. அலைகள் எண்ணெய் பூசியது போல மொழுமொழுவென நெளிந்தன. தலைமை மாலுமி யிடம்(கப்பித்தான்) பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்த மாலுமிகள் பாய் மரத்தை நோக்கி ஓடிச்சென்று கயிறுகளை இறுக்கிறார்கள். விவரிக்க இயலாத ஒரு உறுத்தல் ஒவ்வொருவர் உணர்விலும் தென்பட்டது.
புயலின் தாண்டவம்
கிடுகிடுக்கும் இடி முழக்கத்துடன் மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன. வானம் உடைந்து வெள்ளம் கொட்டு கொட்டென்று கொட்டியது ..சூறாவளியும் மழையும் காற்றும் கூடிக் கலந்து ஆடி குதித்தன மழையுடன் காற்று இணைந்துவிட்டது எலும்புகள் முடிவது போல் நொறு நொறு நொறுங்கல் ஒலி கேட்டது ./திடீரென அமைதி பாய்ந்து வந்து மிரட்டியது. வானும் கடலும் பிரிந்து தனித்து தென்பட்டன.
மீண்டும் கோரத்தாண்டவம்
அனைவரும் தட்டுத்தடுமாறி எழுந்து நடந்தனர் வானும் கடலும் காற்றும் மழையும் மீண்டும் ஒன்றுகூடி கொக்களிக்கின்றன. வானம் பிளந்து தீ கக்கியது. மழை வெள்ளம் கொட்டுகிறது. காற்று முட்டி புரட்டியது. கடல்வெளி கூத்தாடியது .தொங்கான் நடுநடுங்கியது .தாவித்தாவி விழுந்து நொறுங்கியது .கப்பல் நொறு நொறு நொறுங்கியது. முகம், உடல்,கால் ,கைகளில் வெள்ளம். உடலை இறுக்கி இறுக்கி ரம்பமாய் அறுக்கிறது. தொங்கான் மீண்டும் சுழன்று சுழன்று கிறுகிறுத்து கூத்தாடியது.
புயலுக்குப் பின்
தொங்கானில்(கப்பலில்) நீர் நெளிகிறது .பாய்மரம் ஒடிந்து கிடக்கிறது. மாலுமிகள் நீரை இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைக்கிறார்கள். ஆப்பு அடித்தனர்; மரம் வெட்டினார்கள் ;செதுக்கினர். கடற் கூத்தின் போது மாலுமிகள் தூக்கி எறிந்த பெட்டிகளும் புகையிலை சிப்பங்களும் தொங்கானின் இருபுறமு ம்மிதந்து வந்தன. தொங்கான் தட்டுத்தடுமாறி சென்றது. கடற்கூத்து எவ்வளவு நேரம் நீடித்தது என்று கணக்கிட முடியவில்லை. கப்பல் தன்வசம் இழந்து தடுமாறி செல்கிறது . கப்பித்தான் கப்பலின் மேல் தட்டு வந்து கடலையும் வானையும் பார்த்தான் இனி பயமில்லை விரைவில் கரையை க் பார்க்கலாம் என்றான். பாண்டியன் நாற்புறமும் பார்த்து மலைத்து போய் நின்றான்.
கரை தென்பட்டது
தொங்கான் கடலின் தேவைக்கு ஏற்றார் போல மிதந்து சென்றது பகலிரவாய் பின் பகலாகி மீண்டும் இரவானது .பிறைமதி வெளிச்சம் ஒளிர்ந்தது .விண்மீன்கள் ஒளியுடன் கண்சிமிட்டி நின்றன. அவுலியா மீன்கள் நீந்தின. கடற்பரப்பின் ஐந்தாம் நாள் மாலை வானோடு வானாய் கடலோடு கடலாக பச்சை தெரிவது போல் இருந்தது .அரை மணி நேரத்திற்குப்பிறகு மீன்பிடி படகு விளக்குகள் தென்பட்டன. கப்பல் கரையை நெருங்கி போய் நின்றது. பயணிகள் சுங்க அலுவலகத்துக்கு சென்றனர். பயணச்சீட்டுகளை நீட்டினர் .ஜப்பானிய அதிகாரி தமிரோ என்று உறுமினார். தமிழர்கள்தான் என்று தலைகுனிந்து வணங்கினர். பின்னர் சீட்டில் அதிகாரிகள் முத்திரை பதித்து திருப்பிக் கொடுத்து அவர்களை அனுப்பினார்கள்.
முடிவுரை :
மிதக்கிற படகு அல்ல
மூழ்கும் படகே
கடலின் ஆழத்தை அறியும்
ஆம் கடல் பயணம் மேற்கொண்ட வர்களுக்கும் இயற்கை சீற்றத்தில் சிக்கியவர்களுக்கும் தான் அதன் கொடூர முகம் தெரியும் .இக்கதை புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலை உணர்த்துவதோடு கொந்தளிக்கும் கடலுக்குள் பயணித்த அனுபவத்தை நமக்கு தருகிறது.
No comments:
Post a Comment