Saturday, September 17, 2022

பி.எஸ்.ராவ்

 நீடுழி வாழ்க வாழ்க.!

.கல்வித்தந்தை #பிஎஸ்ராவ்

ஸ்ரீ சைத்தன்யா என்னும் சாம்ராஜ்யத்தை தோற்றுவித்தவர்.

அன்பின் அடையாளம்

 ஆக்கத்தின் முகவரி 

உழைப்பில் உயர்வு

உயர்வில் பணிவு 

பொறுமையின் பெருமை 

புன்னகையின் அருமை!

 பூமியில் நீர் ஒரு புதுமை


 அறிவின் பிறப்பிடமே! 

உம் பள்ளி எமக்கு வாழ்விடமே !

லட்சம் லட்சம் மாணவர்களை லட்சியவாதியாக்கும் ஞான சூரியன்!

 காகிதங்களை எல்லாம் பட்டங்களாக்கி வானவீதியில் பறக்கவிடும் படைப்பாளி!


விஞ்ஞானிகளை உருவாக்கும் விஞ்ஞானி! 

மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவர் !

மாமனிதர்களை உருவாக்கும் புனிதர்! 


விஜயவாடாவில் விதைத்த விதை அகிலமெங்கும் கிளை பரப்பியது.

 தேடி தேடித் வந்தோருக்கு கல்வி என்னும் ஞானத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தது!

  ஆம் !

இந்தியா என்னும் தங்க பூமியில் ஒளிரும் வைரங்களாய்

 ஸ்ரீ சைதன்யா பள்ளிகள்!


உம் வாழ்க்கை விந்தையிலும் விந்தை!

 சுதந்திர இந்தியாவுக்கும் உங்களுக்கும் ஒரே வயது !

அகவை75 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வாழ்க!

Wednesday, August 24, 2022

விடுதலைப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய்

 விடுதலைப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய்....

   நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

   நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

     திமிர்ந்த ஞானச் செருக்கு..

என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாய் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில் அவதரித்த வீரப் பெண்மணி தான் ஜான்சி ராணி லட்சுமி பாய் அவரைக் குறித்து இங்கு காண்போம்.

தென்னிந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக வீரம் வழக்கமிட்ட பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் போல் வட இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்டி அடித்த விடுதலைப் போராட்ட வீராங்கனை தான் ஜான்சி ராணி லட்சுமி பாய் ஃ

ஆங்கிலேயர் ஆதிக்கம் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ஜான்சி என்ற பகுதியில் வீர மங்கை ஜான்சிராணி ஆங்கிலேயருக்கு எதிராக தாய் நாட்டின் விடுதலைக்காக முழக்கமிட்டார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் மௌரியபந்தர் மற்றும் பகீரதிபாய் என்ற தம்பதியினருக்கு 1828ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாள் ராணி லட்சுமி பாய் பிறந்தார்.இவருக்கு மணிகர்ணிகா என்று பெயர் சூட்டி மனு என்று செல்லமாக அழைத்தனர். நான்கு வயதாகும் போது தாயார் எதிர்பாராமல் இறந்து விட்டார். அதன்பின் தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்.

      'படிப்பு⸴ குதிரையேற்றம்⸴ வாள்ப்பயிற்சி போன்ற பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார். இக்காலப்பகுதியில் ஆண்மகனுக்கு நிகராக வீரத்துடன் இருந்த வீராங்கனையானார்.. வளரவளர மணிகர்ணிகாவின் எண்ணங்களும் செயல்களும் ஏனைய குழந்தைகளை விடப் பெரிதும் மாறுபட்டிருந்தது.

   இதனால் தன்னை மேலும் மெருகேற்றிக் கொள்ள தந்தையின் உறவினர் மகனான நானா சாஹிப்⸴ தாந்தியாதோப் போன்ற இளைஞர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டார். அடிமையாவதை விட போரிட்டு மடியலாம் என்று ஆங்கிலேயப் பெரும்படையை எதிர்க்க முடிவு செய்தனர்.இவர்களின் கூட்டணி பல முனைகளிலும் விரட்டி அடித்தது.பிற்காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வெற்றிகளையும் கண்டது..

   அக்காலத்தில் பின்பற்றப்பட்ட கொடூரமானகுழந்தை திருமண முறை சிறுமி லட்சுமிபாய்க்கும் நடந்தது. 14ஆவது வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜான்சியின் ராஜாவான கங்காதரராவ்வை மணமுடித்து அரியணை ஏறினார்.

மிக இளம் வயதிலேயே லட்சுமி பாய் ஜான்சியின் ராணியானார். ராணி வந்ததைக் கண்டு கொண்டாடி மகிழ்ந்த மக்கள் அவரை கடவுளாக பாவித்து அவருக்கு கடவுளின் பெயரைச் சூட்டினர். அன்றிலிருந்து மணிகர்ணிகா எனும் லட்சுமிபாய் ஐhன்சிராணி என அழைக்கப்பட்டார்.

   தாயின் மடியில் அமர்ந்து விளையாடும் வயதில் தாய்மை என்ற ஸ்தானத்தை அடைந்தார். ஆனால் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே இறந்துவிட்டது. 4 மாதக் குழந்தையை உடல் நலக்குறைவால் பறிகொடுத்து வாரிசு இல்லாமல் போனதென்று ராஜகுடும்பம் கலங்கியது.

இதன்பின் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து ஆனந்தராவ் எனும் குழந்தையை தத்தெடுத்து அக்குழந்தைக்கு தாமோதரராவ் எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஆனால் சொந்த மகனின் இறப்பு தந்தை கங்காதரராவை வாட்டியது. 1853 நவம்பர் 21 ஆம் நாள் அவரும் காலமானார்.

   தாமோதராவ் மன்னராக முடிசூட ஜான்சி மக்கள் விரும்பினர். ஆனால் இதனை விரும்பாத ஆங்கிலேயர் தமது தந்திரமான சட்டம் ஒன்றை கொண்டு வந்தனர்.. வாரிசுகளை தத்தெடுக்கக்கூடாது அப்படி தத்தெடுத்தால் அதற்கு ஆங்கிலேய ஆட்சியில் அனுமதி பெற வேண்டும். இல்லையென்றால் அந்த அரசு ஆங்கிலேயர் வசம் ஆகும் என்று சட்டத்தை இயற்றினர். இதை எதிர்த்து ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்ட நீதிமன்றத்துக்கு ஜான்சிராணி சென்று வழக்காடினார்.

    இந்நிலையில் ஜான்சியை சுற்றியுள்ள பிரதேசங்களை கைப்பற்றியது ஆங்கிலேய அரசு ஒவ்வொரு பிராந்தியங்களின் குறைகளையும் கண்டறிந்து அதன் மூலம் அவர்களைத் தாக்கிக் கைப்பற்ற தொடங்கியது. ஜான்சியின் அரியணையையும் கைப்பற்ற ஆங்கிலே அரசு ஜான்சியை நோக்கி படையெடுத்தது. அதனை அறிந்து கொண்டு ஒரு பெண்ணாக தனது மகனை காப்பாற்ற நினைத்த லக்ஷ்மி பாய் அரசியாக தன் மக்கள் அடிமையாகி விடக்கூடாது எனவும் உறுதியாக இருந்தார்.அதற்காக உயிரை விடவும் துணிந்தார்.

   ஜான்சி அரண்மனைக்குள் படைகள் தயார் நிலையில் இருந்தது ஆங்கிலேய கமென்டர் கூக்ரோஸ் படைகள் ஜான்சி நோக்கி வந்து போர் புரிந்தனர். ஆங்கிலேயர் 1858இல் ஆட்சியைக் கைப்பற்றினர்.

   தனியாக ஆங்கிலேயரை வீழ்த்த முடியாது என்பதால் அருகிலிருக்கும் அரசுகளுடன் இணைந்து அவர்களை எதிர்ப்போம் என எண்ணி கோட்டையை விட்டு வெளியேறினார் ஜான்சிராணி.

   கோட்டையை விட்டு வெளியேறினாலும் ஜான்சி அரசை பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். லட்சுமிபாய். தனது நிலைமையை வலுவாக்கி தொண்டர் படையை உருவாக்கினார். இதில் ஆண்கள் மட்டுமன்றி பெண்களின் பங்களிப்பும் இடம் பெற்றிருந்தது.தளபதிகளுடன் இணைந்து நேரடியாக களத்தில் இறங்கி சண்டையிட முடிவு செய்து தனது படைகளுடன் களத்தில் இறங்கினார். ஆங்கிலேயப் படையினர் கொடூரமாகவும்⸴ ஈவிரக்கமின்றியும் தாக்கினர்.

   ஆனாலும் ஜான்சி ராணி தயக்கமின்றி துணிவுடன் போராடினார். எது நடந்தாலும் வீரத்தை காட்டுவோம் என கூறி ஆங்கிலேயர்களின் பெரும்படையை எதிர்த்து நின்றார்..இந்நிலையில் ஆங்கிலேயப்படை சுதாரித்துக் கொண்டு கோட்டையைக் கைப்பற்றினர்.

தனது வளர்ப்பு மகன் காப்பாற்றப்பட வேண்டும் என்றும்⸴ தனது உடல் ஆங்கிலேயர் கைகளில் சிக்கக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருந்தார் .இதனால் புல்பாக் இடத்திலிருந்த ஒரு கோவிலில் தஞ்சமடைந்த ராணி தனது மகனை அங்கிருந்து அழைத்துச் செல்ல கட்டளையிட்டார். வீரர்கள் அழைத்துச் சென்ற பின்னர் “என்னை எரித்து விடுங்கள் என் சாம்பல் கூட எதிரிகளுக்கு கிடைக்க கூடாதுˮ எனக்கூறி வீரமரணம் அடைந்தார்.அந்தநொடி இந்தியாவின் வீர மங்கையான ராணி லட்சுமிபாயின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. இந்திய விடுதலைக்கான விதையாக அவர் மண்ணில் புதைந்தார்.

லட்சுமிபாய் களத்திலிருந்து போரிட்டதை நேரில் பார்த்த ஆங்கிலேயத் தளபதி “நாங்கள் சண்டையிட்ட போது குதிரையின் கடிவாளத்தை பற்களில் கடித்துக் கொண்டு இரு கைகளாலும் வாளேந்திப் போரிட்டதைப் பார்த்து திகைத்ததாகப்ˮ புகழ்ந்தார்.

ராணியின் வீரத்திற்கு மிகப்பெரும் மரியாதையாக சுபாஷ்சந்திரபோஸ் அவர்கள் பெண்களைக் கொண்ட படையை உருவாக்கி அதற்கு “ராணி லட்சுமி பாய்” எனப் பெயர் வைத்து பெருமைப்படுத்தினார்.

ஜான்சிராணி வாழ்ந்த அரண்மனை அருங்காட்சியமாக இயங்கி வருகின்றது. அவர் மறைந்த முக்பாக் என்ற பகுதி ராணியின் அடையாளச் சின்னமாக இன்றுவரை வீரத்தின் அடையாளமாகஒளி வீசி வருகின்றது. மேலும் ஜான்சி ராணியின் பெயரில் கல்வி நிலையங்கள்⸴ மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு இன்றளவும் அவர் நினைவுச் சின்னங்களாக அவரின் பெருமையை பறைசாற்றுகின்றன.

இவரது வாழ்க்கை என்பது ஓர் சரித்திரம் என்பது மட்டுமல்லாது வளரும் பெண் சமூகத்திற்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்துள்ளது என்றால் அதுமிகையாகாது.குறுகிய காலம் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும் அன்பு⸴ வீரம்⸴ ரௌத்திரம் என சிறப்புமிக்க குணங்களால் சாகா வரம் பெற்றார்.வரலாற்றில் அவர் பெயர் பொன்னெழுத்துகளால் பொறாக்கப்பட்டு விட்டது உலக உள்ளவரை வீரப் பெண்மணி ஜான்சி ராணியின் புகழும் நிலைத்திருக்கும்.


Wednesday, June 29, 2022

பட்டினத்தார் -பாடல் - தீவினை

 என்செய லாவது’ யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே

உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த ஊனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோவிங்ஙன் வந்து மூண்டதுவே (22)


Friday, June 24, 2022

இயற்கை எழில்கொஞ்சம் இந்தியா

 இயற்கை வளம் கொஞ்சும் இந்தியா

"""""""''"'""""""""""""""'''''''””""""''''""'"""""""""'

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் 

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...

என்று பாடினார் கவிஞர் மருதகாசி.இது கற்பனை வரிகள் அல்ல.சத்திய வரிகள்.

ஆம் இந்தியா என்றாலே இயற்கை வளம் கொஞ்சம் பூமிதான்! அதனால் தான் மகாகவி பாரதியார் /"பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்று பெருமை பொங்க பாடினார்.

.வடக்கே இமயமலை ,தெற்கே இந்தியெருங்கடல்  ,மேற்கே அரபிக் கடல் ,கிழக்கே வங்காள விரிகுடா என இயற்கையே இந்தியாவுக்கு அரண்களாக உள்ளது.உலகில் வேறு எந்த நாட்டுக்கும் இத்தகு சிறப்பு கிடையாது.

 தமிழ்நாட்டில்  தாமிரபரணி - வைகை கர்நாடகாவில் காவிரி..ஆந்திராவில் கோதாவரி , கிருஷ்ணா  வடக்கே சென்றால்ஒரிசாவில் மகாநதி, மத்திய பிரதேசத்தில் நர்மதா, மராட்டியத்தில் தபதி, உத்தர பிரதேசத்தில் கங்கா , டெல்லியில் யமுனா, ஒரிசாவில் மகாநதி காஷ்மீரில் சிந்து, அஸ்ஸாமில் , பிரம்மபுத்திராஅப்பப்பா எத்தனை நதிகள் எத்தனை நதிகள்.உலகிலேயே அதிக நதிகளும் ஏரிகளும் குளங்களும் உள்ள தேசம் இந்தியா தான்.

தின்னத் தின்ன தெவிட்டாத ஆயிரக்கணக்கான பழவகைகளும் ,கணக்கிலடங்காத காய்கறி வகைகளும் ,எண்ணமுடியாத தானிய வகைகளும் இம்மண்ணில் உண்டு.

மலைவளம் ,மண் வளம், நீர் வளம் ,நில வளம்என இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் புண்ணிய பூமி தான் பாரத பூமி.

அதிலும் இயற்கை வளத்தை பேணுவதிலும் பெருக்குவதிலும் தமிழன் முன்னோடியாக திகழ்ந்தான் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் கட்டிய கல்லணை இன்னும் கட்டியம் கூறுகின்றது.

இன்று மென்பொருள் பூங்காவாக திகழும் சிங்காரச் சென்னை ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான ஏரிகளும் குளங்களும் நிறைந்த விவசாய பூமி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

   என் போன்ற குழந்தைகளை கனவு காண சொன்ன ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் அறிவியல் மேதை மட்டுமல்ல;  அவர் ஒரு இயற்கை காதலர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அவர் தொடங்கி வைத்த மரம் நடும் இயக்கம் இன்று பல கோடானுகோடி விதைகளை இம்மண்ணில் விதைத்துள்ளது.

ஆம் விதைத்தவர் தூங்கலாம் விதைகள் தூங்குவதில்லை. மனிதர்கள் இல்லாமல் மரங்கள் ஆல் வாழ முடியும் ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது என்பதை நாம் என்றும் நினைவில் நிறுத்த வேண்டும்.

இன்று உயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஒரு நாள் விதைகளாக மண்ணில் விழுந்த வையே!நாமும் மரம் நடுவோம் இயற்கை வளத்தை காப்போம் -பாரதத்தை பசுமை தேசம் ஆக்குவோம் .இந்திய தேசத்தை வளம் கொழிக்கச் செய்வோம் நன்றி வணக்கம்.

பசுமை பாரதம்,' தூய்மை இந்தியா

 


. தூய்மை பாரதம்.. பசுமை பாரதம்

     தூய்மை என்பது வீட்டில் வேண்டும் 

தூய்மை என்பது நாட்டில் வேண்டும் 

தூய்மை என்பது உலகுக்கு வேண்டும்

தூய்மை என்பது எங்கும் வேண்டும் 

எப்போதும் வேண்டும்..!.

எங்கு தூய்மை இருக்கிறதோ  அங்கு இறைவன் இருப்பான்.

அதனால் தான் நம் முன்னோர்கள் "சுத்தம் வீட்டைக் காக்கும் சுகாதாரம் நாட்டைக் காக்கும்""என்றனர்.அப்பொன்மொழிக்கு ஏற்ப மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

நவீன பாரதத்தின் பன்னோக்கு வளர்ச்சிப் பரிமாணங்களில் முதன்மையாகக் கருதப்படுவது தூய்மை மற்றும் பசுமை.

இயற்கை அன்னை வாரி கொடுத்து கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம் நிறைந்த தன்னிகரற்ற  நாடாக திகழ்கிறது  நம் பாரதம். வடக்கே உயர்ந்து நிற்கும் இமயமலை |தெற்கே பசுமை படர்ந்து கிடக்கும் பொதிகை மலை இரண்டுக்குமிடையே ஆயிரமாயிரம் நதிகள், ,குளங்கள் ,ஏரிகள் என இயற்கை அழகு கொலுவீற்றிருக்கும் தேசம் நம்தேசம்.

ஆனால் ,இன்றோ ஆற்று மணல்கள் திருடப்பட்டன .கற்பாறைகள் களவாடப்பட்டன. ஏரிகளும் குளங்களும் இருந்த இடங்கள் மூடப்பட்டன அவையிருந்த இடங்களில் வான் முட்டும்  கட்டிடங்கள் வளர்ந்து நிற்கின்றன..இப்படியே தொடர்ந்தாள் எதிர்கால மனித குலம் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கடல் வளம் ,கனிம வளம், மண் வளம் ,மலை வளம், மனிதவளம்  |அறிவியல் வளம் ,ஆன்மீக வளம்,என அனைத்து வளத்திலும் சிறந்த நாம் ,அவற்றை    வீணடிக்காமல் அவற்றைக் பாதுகாக்க  சபதம் ஏற்போம். ."பொதுச்சொத்து என்பது பொறம்போக்கு அல்ல; அது பொதுமக்களாகிய நம்முடைய சொத்து".என்ற உணர்வு . ஒவ்வொரு குடிமகனுக்கும் வரவேண்டும் .அதற்காக உருவாக்கப்பட்டது தான்  பசுமை இந்தியா இயக்கம்.

பசுமை மற்றும் தூய்மையில் அரசின் பல்வேறு முயற்சிகளால் மெச்சத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். சுகாதாரம் மற்றும் கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு பாமர மக்களிடம் கொண்டு சேர்க்கப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட கழிவறை அத்தியாவசியமாக மாறிவிட்டது.

தூய்மை பசுமை குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பள்ளி மாணவர்களின் பங்கு மகத்தானது. புதிய பாரதத்தை இளைஞர்களே கட்டமைக்க முடியும் . அதனால்தான் மகாகவி பாரதியார் 

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா 

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா 

களி படைத்த மொழியினாய்  வா வா வா 

கடுமை கொண்ட தோளினாய் வா வா வா

இளைஞர்களுக்கு   அழைப்பு விடுத்தார்.

ஆம் என் மாணவ தோழர்களே! வாருங்கள்

ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்

ஆசைக்கொரு  மரம் வளர்ப்போம்

பேருக் கொரு மரம் வளர்ப்போம்

ஊருக்கொரு மரம் வளர்ப்போம்'

 வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்

 நாட்டுக்காக மரம் வளர்ப்போம்

மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும்  ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது..என்பதை என்றும் நம் நினைவில் நிறுத்துவோம்.

மண் பயனுற வேண்டும்

 மக்கள் நலம் பெற வேண்டும்

 நாடு செழிப்புற வேண்டும் 

   நாம் அனைவரும்  இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் 

இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் !

வாழ்க தமிழ் வெல்க பாரதம். '


Monday, May 2, 2022

பொருளறிக

 

நார்கரணம்
-
, மனம்,புத்திசித்தம்அகங்காரம்
நெறிநாலு
-
வைதருப்பம்(ஆசுகவி),கௌடம்(மதுரகவி),பாஞ்சாலம்
(
சித்திரகவி),மாகதம்(வித்தாரகவி)
நாற்பொருள்
-
அறம்பொருள்இன்பம்வீடு
சீத்தையர்
-
கீழானவர்போலிப்புலவர்
நாளிகேரம்
-
தென்னை
மூத்த
-
முதிர்ந்த
தேர்ந்து
-
ஆராய்ந்து
உறாஅமை
-
துன்பம் வராமல்
தமர்
-
உறவினர்
தலை
-
சிறப்பு
செற்றார்
-
பகைவர்
தகைமை
-
தன்மை
மதலை
-
துணை
பொய்யா விளக்கம்
-
அணையா விளக்கு
ஈனும்
-
தரும்
புல்லார்
-
பற்றார்
உல்குபொருள்
-
வரியாக வரும்பொருள்
குழவி
-
குழந்தை
கேண்மை
-
நட்பு
நோய்
-
துன்பம்
பேணி
-
போற்றி
வன்மை
-
வலிமை
சூழ்வார்
-
அறிவுடையார்
இல்
-
இல்லை
ஏமரா
-
பாதுகாவல் இல்லாத
எள்ளுவர்
-
இகழ்வர்
இருள்
-
பகை
தீதின்றி
-
தீங்கின்றி
உறுபொருள்
-
அரசு உரிமையால் வரும்பொருள்
தெரு
-
பகை
செவிலி
-
வளர்ப்புத்தாய்
குன்று
-
மலை
செருக்கு
-
இறுமாப்பு
இடர்
-
துன்பம்
பிணி
-
நோய்
சேவடி
-
இறைவனின் செம்மையான திருவடிகள்
ஏமாப்பு
-
பாதுகாப்பு
நடலை
-
துன்பம்
நமன்
-
எமன்
தெண்டிரை
-
தெளிந்த அலைகள்
தடக்கரி
-
பெரிய யானை
தாரை
-
வழி
உழுவை
-
புலி
வெள்ளெயிறு
-
வெண்ணிறப் பற்கள்
வள்ளுகிர்
-
கூர்மையான நகம்
நிணம்
-
கொழுப்பு
கிரி
-
மலை
தொனி
-
ஓசை
கவை
-
பிளந்த
எண்கு
-
கரடி
எழில்
-
அழகு
இடர்
-
துன்பம்
மாத்திரம்
-
மலை
புளகிதம்
-
மகிழ்ச்சி
பூதரம்
-
மலை
திறல்
-
வலிமை
மந்தராசலம்
-
மந்தரமலை
சிரம்
-
தலை
உன்னி
-
நினைத்து
கான்
-
காடு
திரள்
-
கூட்டம்
அடவி
-
காடு
கனல்
-
நெருப்பு
வனம்
-
காடு
மடங்கள்
-
சிங்கம்
கோடு
-
தந்தம்
உரும்
-
இடி
மேதி
-
எருமை
கேழல்
-
பன்றி
மரை
-
மான்
புயம்
-
தோள்
வேங்கை
-
புலி
கேசரி
-
சிங்கம்
கவின்
-
அழகு
தெரிசனம்
-
காட்சி
புந்தி
-
அறிவு
சந்தம்
-
அழகு
செகுதிடுவது
-
உயிர்வதை செய்வது
தெளிந்தார்
-
தெளிவு பெற்றார்
கிளை
-
சுற்றம்
நோன்றல்
-
பொறுத்தல்
புயல்
-
மேகம்
பனண
-
மூங்கில்
பகரா
-
கொடுத்து
பொருது
-
மோதி
நிதி
-
செல்வம்
புனல்
-
நீர்
கவிகை
-
குடை
மீன்நோக்கும்
-
மீன்கள் வாழும்
என்பால்
-
என்னிடம்
தார்வேந்தன்
-
மாலையணிந்த அரசன்
கோல்நோக்கி
-
செங்கோல் செய்யும் அரசனை நோக்கி