இயற்கை வளம் கொஞ்சும் இந்தியா
"""""""''"'""""""""""""""'''''''””""""''''""'"""""""""'
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...
என்று பாடினார் கவிஞர் மருதகாசி.இது கற்பனை வரிகள் அல்ல.சத்திய வரிகள்.
ஆம் இந்தியா என்றாலே இயற்கை வளம் கொஞ்சம் பூமிதான்! அதனால் தான் மகாகவி பாரதியார் /"பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்று பெருமை பொங்க பாடினார்.
.வடக்கே இமயமலை ,தெற்கே இந்தியெருங்கடல் ,மேற்கே அரபிக் கடல் ,கிழக்கே வங்காள விரிகுடா என இயற்கையே இந்தியாவுக்கு அரண்களாக உள்ளது.உலகில் வேறு எந்த நாட்டுக்கும் இத்தகு சிறப்பு கிடையாது.
தமிழ்நாட்டில் தாமிரபரணி - வைகை கர்நாடகாவில் காவிரி..ஆந்திராவில் கோதாவரி , கிருஷ்ணா வடக்கே சென்றால்ஒரிசாவில் மகாநதி, மத்திய பிரதேசத்தில் நர்மதா, மராட்டியத்தில் தபதி, உத்தர பிரதேசத்தில் கங்கா , டெல்லியில் யமுனா, ஒரிசாவில் மகாநதி காஷ்மீரில் சிந்து, அஸ்ஸாமில் , பிரம்மபுத்திராஅப்பப்பா எத்தனை நதிகள் எத்தனை நதிகள்.உலகிலேயே அதிக நதிகளும் ஏரிகளும் குளங்களும் உள்ள தேசம் இந்தியா தான்.
தின்னத் தின்ன தெவிட்டாத ஆயிரக்கணக்கான பழவகைகளும் ,கணக்கிலடங்காத காய்கறி வகைகளும் ,எண்ணமுடியாத தானிய வகைகளும் இம்மண்ணில் உண்டு.
மலைவளம் ,மண் வளம், நீர் வளம் ,நில வளம்என இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் புண்ணிய பூமி தான் பாரத பூமி.
அதிலும் இயற்கை வளத்தை பேணுவதிலும் பெருக்குவதிலும் தமிழன் முன்னோடியாக திகழ்ந்தான் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் கட்டிய கல்லணை இன்னும் கட்டியம் கூறுகின்றது.
இன்று மென்பொருள் பூங்காவாக திகழும் சிங்காரச் சென்னை ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான ஏரிகளும் குளங்களும் நிறைந்த விவசாய பூமி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
என் போன்ற குழந்தைகளை கனவு காண சொன்ன ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் அறிவியல் மேதை மட்டுமல்ல; அவர் ஒரு இயற்கை காதலர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அவர் தொடங்கி வைத்த மரம் நடும் இயக்கம் இன்று பல கோடானுகோடி விதைகளை இம்மண்ணில் விதைத்துள்ளது.
ஆம் விதைத்தவர் தூங்கலாம் விதைகள் தூங்குவதில்லை. மனிதர்கள் இல்லாமல் மரங்கள் ஆல் வாழ முடியும் ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது என்பதை நாம் என்றும் நினைவில் நிறுத்த வேண்டும்.
இன்று உயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஒரு நாள் விதைகளாக மண்ணில் விழுந்த வையே!நாமும் மரம் நடுவோம் இயற்கை வளத்தை காப்போம் -பாரதத்தை பசுமை தேசம் ஆக்குவோம் .இந்திய தேசத்தை வளம் கொழிக்கச் செய்வோம் நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment