. தூய்மை பாரதம்.. பசுமை பாரதம்
தூய்மை என்பது வீட்டில் வேண்டும்
தூய்மை என்பது நாட்டில் வேண்டும்
தூய்மை என்பது உலகுக்கு வேண்டும்
தூய்மை என்பது எங்கும் வேண்டும்
எப்போதும் வேண்டும்..!.
எங்கு தூய்மை இருக்கிறதோ அங்கு இறைவன் இருப்பான்.
அதனால் தான் நம் முன்னோர்கள் "சுத்தம் வீட்டைக் காக்கும் சுகாதாரம் நாட்டைக் காக்கும்""என்றனர்.அப்பொன்மொழிக்கு ஏற்ப மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
நவீன பாரதத்தின் பன்னோக்கு வளர்ச்சிப் பரிமாணங்களில் முதன்மையாகக் கருதப்படுவது தூய்மை மற்றும் பசுமை.
இயற்கை அன்னை வாரி கொடுத்து கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம் நிறைந்த தன்னிகரற்ற நாடாக திகழ்கிறது நம் பாரதம். வடக்கே உயர்ந்து நிற்கும் இமயமலை |தெற்கே பசுமை படர்ந்து கிடக்கும் பொதிகை மலை இரண்டுக்குமிடையே ஆயிரமாயிரம் நதிகள், ,குளங்கள் ,ஏரிகள் என இயற்கை அழகு கொலுவீற்றிருக்கும் தேசம் நம்தேசம்.
ஆனால் ,இன்றோ ஆற்று மணல்கள் திருடப்பட்டன .கற்பாறைகள் களவாடப்பட்டன. ஏரிகளும் குளங்களும் இருந்த இடங்கள் மூடப்பட்டன அவையிருந்த இடங்களில் வான் முட்டும் கட்டிடங்கள் வளர்ந்து நிற்கின்றன..இப்படியே தொடர்ந்தாள் எதிர்கால மனித குலம் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கடல் வளம் ,கனிம வளம், மண் வளம் ,மலை வளம், மனிதவளம் |அறிவியல் வளம் ,ஆன்மீக வளம்,என அனைத்து வளத்திலும் சிறந்த நாம் ,அவற்றை வீணடிக்காமல் அவற்றைக் பாதுகாக்க சபதம் ஏற்போம். ."பொதுச்சொத்து என்பது பொறம்போக்கு அல்ல; அது பொதுமக்களாகிய நம்முடைய சொத்து".என்ற உணர்வு . ஒவ்வொரு குடிமகனுக்கும் வரவேண்டும் .அதற்காக உருவாக்கப்பட்டது தான் பசுமை இந்தியா இயக்கம்.
பசுமை மற்றும் தூய்மையில் அரசின் பல்வேறு முயற்சிகளால் மெச்சத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். சுகாதாரம் மற்றும் கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு பாமர மக்களிடம் கொண்டு சேர்க்கப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட கழிவறை அத்தியாவசியமாக மாறிவிட்டது.
தூய்மை பசுமை குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பள்ளி மாணவர்களின் பங்கு மகத்தானது. புதிய பாரதத்தை இளைஞர்களே கட்டமைக்க முடியும் . அதனால்தான் மகாகவி பாரதியார்
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆம் என் மாணவ தோழர்களே! வாருங்கள்
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்
ஆசைக்கொரு மரம் வளர்ப்போம்
பேருக் கொரு மரம் வளர்ப்போம்
ஊருக்கொரு மரம் வளர்ப்போம்'
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
நாட்டுக்காக மரம் வளர்ப்போம்
மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும் ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது..என்பதை என்றும் நம் நினைவில் நிறுத்துவோம்.
மண் பயனுற வேண்டும்
மக்கள் நலம் பெற வேண்டும்
நாடு செழிப்புற வேண்டும்
நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் !
வாழ்க தமிழ் வெல்க பாரதம். '
No comments:
Post a Comment