Thursday, July 4, 2019

கவிதை. சிங்கம் அல்ல நான் ...

அழைத்துச் சென்றார்கள்
பசும்புல் கிடைக்கும் என்று
 பசியோடு நடந்தேன்....
 என் குழந்தையின் தலையை அறுத்து தட்டில் வைத்திருந்தார்கள்..... தோலை உரித்து தொங்க விட்டிருந்தார்கள் ... தசைகளை துண்டு துண்டாக நறுக்கி கூறு  வைத்திருந்தார்கள் ....
 என்னுள் பால் சுரந்த காலத்தில் அருகம்புல் லோடு .....
அகத்திக்கீரையும் கொடுத்தவர்கள் ......
இப்போது கத்தியை தீட்டுகிறார்கள்.... என் காம்புகளை அறுக்க.....
.... சீறிப்பாய சிங்கம் அல்ல நான். .!

2 comments:

  1. மிகவும் அருமை.. தருமமிகு சென்னையில் நீங்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் அனைத்தும் உங்களை இன்னும் வீரியமான கவிதைகளை எழுத த் தூண்டும்... மென் மேலும் கவிதைகள் பிறக்கட்டும்.. வாழ்க வளமுடன்

    ReplyDelete