பூமி பூக்களைத்தான்
பரிசளித்தது ...
ஆனால்
மனிதனோ
பூக்களுக்கு தீ வைத்து விட்டு
சாம்பலை
ஆராய்ச்சி செய்கிறான் ...
இயற்கை
தென்றலைக்தான்
அனுப்பி வைத்தது ....
ஆனால் மனிதனோ
காற்றின் முகத்தில்
கரியமிலவாயுவை பூசி விட்டு ..
முகத்தில்
கைக்குட்டையைக்
கட்டிக் கொள்கிறான்...
சுத்தமான நீரை தூரலாக அனுப்புகிறது.... வானம்.
இவனோ ...
நீரை கூவமாக்கி விட்டு
கடல்நீரை குடிநீராக்குகிறான் ....
இயற்கையை அழித்து
எநத இனமும்
வாழ வேண்டாம்-
இயற்கை காக்க
எத்தனை இனமும்
மரணிக்கலாம்'.... (ஓவியம்: பிரவீன் ராம்)
அருமையான புதிய சிந்தனை
ReplyDeleteமிகவும் நன்று.. மனிதன் யோசித்தால் சரி...
ReplyDelete