நினைப்பது முடியும்
மனிதன் தன் தலைவிதியைத் தானே தீர்மானிக்கிறான் என்கிறார் கௌதம புத்தர்.
நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் – குறள்
முயன்றால் முடியாதது எதுவுமில்லை. விடாமுயற்சியே மனிதனை மாமனிதனாக ஆக்குகிறது. வெற்றியின் இரகசியம் விடாமுயற்சியே. தண்ணீருக்குள் விழுந்த முதல் மனிதன் உயிர் பிழைத்தது முயற்சியால்தான். முயற்சியின் தேவை, இன்றியமையாமை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
விடாமுயற்சி
“தூங்கும்போது
காண்பது அல்ல கனவு
உன்னை தூங்கவிடாமல்
செய்வதுதான் கனவு” - அப்துல் கலாம்
ஆம் ! கனவு என்பது நம் ஒவ்வொரு அணுக்களிலும் கலந்துவிட வேண்டும். அப்போது தான் வெற்றி சாத்தியமாகும்.
சச்சின் டெண்டுல்கர் சாதனைபடைத்ததும், ஆபிரகாம்லிங்கன் அமெரிக்க அதிபர் ஆனதும், விடாமுயற்சியால்தான்.
‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது வெறும் வார்த்தையல்ல சத்தியம். ஆயிரம் தோல்விகளை சந்தித்தப்பின்பே எடிசன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக்கண்டுபிடித்தார்.
தேனீக்கள் தேன் சேகரிப்பதும், எறும்புகள் தானியங்கள் சுமப்பதும், எத்தனைமுறை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து சிலந்தி வலைப்பின்னுவதும் இயற்கை நமக்குக்கற்றுக்கொடுக்கும் கடின உழைப்புக்கான பாடங்களாகும். ‘மீனவ குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக’ ஆனதும், ‘டீக்கடை’ நடத்திய மோடி பிரதமரானதும் கடின உழைப்பால் தான் .
உழைப்பில்லாமல் உயர்வில்லை.
நம்பிக்கை... நம்பிக்கை...
கொண்ட இலட்சியத்தில் முழுமையான நம்பிக்கை இதுதான் வெற்றியின் ரகசியம்.
வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம் - தாராபாரதி
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குச்சிறந்த முதலீடு நம்பிக்கை; கூடுதல் முதலீடு கடின உழைப்பு; காற்று இல்லாமல் மூன்று நிமிடம், நீரில்லாமல் மூன்று நாள் வாழ முடியும், உணவு இல்லாமல் முப்பது நாள் வாழ முடியும் ஆனால் ‘நம்பிக்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது’.
பறவைகளைக்கண்டான்
விமானம் படைத்தான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்.....
கனவு மெய்ப்படும்
ஆம் ஒரு கனவு வேண்டும். அதை தினம் தினம் நினைக்க வேண்டும்; அதற்காகதினம் உழைக்க வேண்டும்; அவ்வாறு செய்தால் கனவு மெய்ப்படும். ரைட் சகோதரர்கள் விமானம் கண்டு பிடித்ததும், சார்லஸ் பாபேஜ் கணினியை கண்டுபிடித்ததும் அப்படித்தான். நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை....; உழைப்பு… உழைப்பு… உழைப்பு… இதுவே கணவை மெய்ப்பட வைக்கும்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு – குறள்
நீர்நிலைகளில் தண்ணீர் உயரம் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவுதான் தாமரைத் தண்டின் உயரமும் இருக்கும். அதுபோல் நம் எண்ணம் எந்த அளவுக்கு உயர்வாக இருக்கிறதோ, அதே அளவு வெற்றியும் இருக்கும். அதனால்தான், பாரதியும் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்று பாடினான். நாம் நினைப்பது எல்லாம் உயர்வாக நினைக்க வேண்டும். நம் நாட்டு அறிவியல் அறிஞர்களுக்கு உயர்ந்தகுறிக்கோள் இருந்ததால்தான் , நிலவிற்கு சந்திராயன், செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பமுடிந்த்து.
போராடும் குணம
ஆபிரகாம் லிங்கன் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை தேவாலயத்திற்குச் சென்றார். வழிபாடு முடிந்ததும், பாதிரியார், “யாரெல்லாம் பரலோக ராஜ்ஜியத்திற்குள் செல்ல ஆசைப்படுகிறீர்கள் ? ” என்று கேட்டார். லிங்கனைத்தவிர அனைவரும் கை உயர்த்தினர். பாதிரியார் , “ ஆபிரகாம் நீ எங்கே செல்ல போகிறாய் ? ” என்று கேட்டார். அதற்கு லிங்கன், “நான் வெள்ளை மாளிகைக்குள் அதிபராக செல்ல வேண்டும் ” என்று கூறினார். சொன்னதை பின்னாளில் செய்துகாட்டினார்.
சுற்றும் வரை பூமி
சுடும் வரை நெருப்பு
போராடும் வரை மனிதன்
நீ ஒரு மனிதன் - வைரமுத்து
இலட்சியத்தை வென்றெடுக்க போராடும் குணம் மிகவும் அவசியம் காலில் மிதிபட்ட எறும்பு துடிப்பது வலியால் மட்டுமல்ல; வாழ்வதற்காகவும் தான். வாஞ்சிநாதன், மகாத்மா காந்தி, பகத்சிங் போன்ற ஆயிரக்கணக்கான மாவீர்ர்களின் போராடும் குணமே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது.
தன்னம்பிக்கை
நவீன அறிவியல் தந்தை எனப் போற்றப்படும் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கின்ஸ் தன்னம்பிக்கையின் சிகரமாக திகழ்ந்தவர். கழுத்தில் இருந்து அனைத்து உடல் உறுப்புகளும் செயலிழந்தும் ஆராய்ச்சி செய்வதை விட வில்லை. கண் அசைவின் மூலம் அறிவியல் கருத்துகளை பதிவு செய்தார். கருத்துகளை உமிழும் கதிர்வீச்சு பற்றிய அவரது கண்டுபிடிப்பு அறிவியல் உலகை வியப்படையச் செய்தது.
தன்னம்பிக்கையின் மறு உருவமாகவே ஹெலன் கெல்லருக்கு காது கேட்காத வாய் பேச முடியாத கண் பார்வை கிடையாது. ஆனாலும் அவரால் சிறந்த எழுத்தாளராக, சிந்தனையாளராக முடிந்தது. இது தன்னம்பிக்கையால் மட்டும் சாத்தியமே!!
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் – குறள்
தெய்வத்தால் முடியாதது காரியமும் கூட முயற்சியால் முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை முயற்சி திருவினையாக்கும் முயற்சி செய்வோம் பயிற்சி செய்வோம் ....வெற்றி பெறுவோம்....
மேலும் இதுபோன்ற கட்டுரைகளை படிக்க
I think you might like this book – "பொதுக்கட்டுரைகள் (Tamil Edition)" by பொன் தாமோ.
Start reading it for free: https://amzn.in/hIJcOAG
No comments:
Post a Comment